Monday, May 20, 2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

Must Read

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர். பின், தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், அக்டோபர் மாதம் மாணவர்கள் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவர் குழு ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி இந்த அரசாணையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சாத்தியக் கூறுகள் இல்லை:

இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்துக்கு அருகே உள்ள மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் செயல்படும் ஆவின் பாலகத்தை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், 11 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

ஒரு மாதத்தில் தொப்பையை முழுமையாக குறைக்க வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

minister senkotayan
minister senkotayan

பின், செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது “கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான். ஒரு அளவிற்கு கொரோனா பரவல் குறைந்ததும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -