‘காற்றின் மொழி’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்!!

0
vaishnavi
vaishnavi

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் காற்றின் மொழியும் ஒன்று. இந்த சீரியலில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து வருபவர் தான் வைஷ்ணவி. இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வைஷ்ணவி:

விஜய் டிவி சீரியல் என்றாலே அதற்கு தனி மவுசு தான். ஏனெனில் விஜய் டிவி அந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் டிவியில் நடித்த பல பிரபலங்கள் வெள்ளித்திரையிலும் கொடிகட்டி பறந்து வருகின்றனர். விஜய் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

vaishnavi
vaishnavi

இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் டாப் ரேஞ்சில் போயிக் கொண்டுள்ளன. அந்த வகையில் காற்றின் மொழி சீரியலும் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சஞ்சீவ் மற்றும் பிரியங்கா இதில் ஜோடியாக நடித்திருப்பர். கிராமத்தில் எடுக்கப்பட்ட கதை என்பதால் மக்கள் அனைவராலும் விரும்பப்பட்டது.

vaishnavi
vaishnavi

மேலும் வாய் பேச முடியாத நாயகியின் மீது நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது. இது திருமணத்தில் முடியுமா?? என்பதே கதையாக போய்க் கொண்டுள்ளது. இதில் வாய்பேச முடியாமல் இருக்கும் நாயகியின் தோழியாக வரும் ரோஸி தான் வைஷ்ணவி. இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த வைஷ்ணவி தனது காதல் நிறைவேறியதற்கான சந்தோசத்தை புகைப்படங்களாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here