வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் அட்சய திரிதி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 10) முதல் 12 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி  சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நெல்லை, மதுரை, திருவண்ணாமலை,  உள்ளிட்ட இடங்களுக்கும், கோயம்பேட்டில் இருந்து பெங்களூர், நாகை உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நாளை முதல் 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 1,235 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CSK vs GT 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here