Monday, April 29, 2024

அல்சரை விரட்ட இது மட்டும் போதும் – வீட்டு வைத்தியம்!!

Must Read

தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கு அல்சர் பிரச்சனை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் தான். இந்த அல்சரை குணப்படுத்த என்ன செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

அல்சர் குணமாக??

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் நேரத்திற்கு சாப்பிடாததே. காலையில் உணவை தவிர்ப்பதாலும் அல்சர் ஏற்படுகிறது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதால் அல்சர் ஏற்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

alcer
alcer

இந்த அல்சர் ஏற்படுவதற்கான அறிகுறிகளாவன, அடிக்கடி குமட்டல், வயிற்று வலி, ரத்த வாந்தி, திடீர் உடல் எடை குறைவு போன்றவை ஆகும். காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் அல்சர் ஏற்படும். அல்சரை குணப்படுத்த சில உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

  • காலையில் எழுந்ததும் சாதம் வடித்த நீரை பருகி வந்தால் வயிறு குளிர்ச்சியடையும். மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு 2 முறையாவது சமைத்து சாப்பிட வேண்டும்.

பெண்கள் புருவ முடிகளை எடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் – இவ்வளவு இருக்கா??

  • தினமும் குறிப்பிட்ட நாட்களுக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமடையும்.
  • தேங்காய் பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அல்சர் குணமடையும். தேங்காய்ப்பால் குடல் புண், வாய் புண் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
How-to-treat-a-stomach-ulcer-naturally
How-to-treat-a-stomach-ulcer-naturally
  • ஆப்பிள் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் 1 சொட்டு ரத்தம் ஊரும். இந்த ஆப்பிளை ஜூஸ் செய்து குடித்து வந்தால் அல்சரால் ஏற்பட்ட வயிறு வலி குணமடையும்.
  • பாகற்காயை நம்மில் பலருக்கு பார்த்தாலே பிடிக்காது. ஆனால் அதில் தான் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. அதன் கசப்பு தன்மை குடலில் உள்ள புழுக்களை அழிக்க கூடியது. எனவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமடையும்.
How-to-treat-a-stomach-ulcer-naturally
How-to-treat-a-stomach-ulcer-naturally
  • தினமும் சிறிது வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். மேலும் முட்டைகோஸை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமடையும். இல்லையெனில் அதனை சூப் வைத்தும் குடிக்கலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனை சரி ஆகும்.
  • மேலும் பால் பொருட்களை தவிர்த்து வர வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கொழுப்பு சத்துகள் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -