Friday, April 26, 2024

இசை உலகில் யாரும் நிரப்ப முடியாத இடம் – பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்!!

Must Read

இந்தியாவின் தலைசிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

“பாடும் நிலா”:

இசை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கடத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்தது. அவர் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவிற்கு பலரும் தங்களது அனுதாபங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்:

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறுகையில் “பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மெல்லிய குரலை நாம் இழந்து விட்டோம். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.”

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு “இசை உலகில் யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டு சென்றிருக்கிறார். அவரது மறைவு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் “திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு நமது கலாச்சார உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம்,தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சொந்தராஜன் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -