Monday, May 20, 2024

கவல படாதடா கண்ணா, உனக்கு ஒன்னும் ஆகாது – ரசிகருக்காக ரஜினி வெளியிட்ட உருக்கமான ஆடியோ!!

Must Read

உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகர் ஒருவருக்கு ஆறுதல் கூறுவது போல் ஆடியோ ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். தற்போது அது அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.

ரசிகருக்கு உடல்நல குறைவு:

மதுரையை சேர்ந்தவர் முரளி. இவர் தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் தான் ரஜினிக்காக முதன்முதலில் ரசிகர் மன்றத்தை உருவாக்கியவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறிருந்தாவது “தலைவா, எனது இறுதி ஆசை நீ தமிழகத்தின் முதல்வராக வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான். கிராம மக்களின் தனி நபர் வருமானம் ரூ.25 ஆயிரம் என்ற நிலையை நீ உருவாக்க வேண்டும்.” என்று கூறிருந்தார்.

ரஜினி பதில்:

இதற்கு பதிலளித்து நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “முரளி நான் ரஜினி பேசுகிறேன். கவலை படாதே கண்ணா. உனக்கு ஒன்றும் ஆகாது. சீக்கிரமாக நீ நலம் அடைய நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். நலம் பெற்றதும் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். தைரியமாக இருங்கள்.” என்று கூறியுள்ளார்

கொரோனா பாதித்த கர்நாடக பாஜக எம்.பி உயிரிழப்பு – கட்சியினர் அதிர்ச்சி!!

தற்போது முரளி சிகிச்சை பெற்று நலம் அடைத்து வருவதாக அவரை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது?? நாளை தொடங்கும் பிளே ஆப் போட்டிகள்!!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -