அசத்தலான ‘Fish Balls’ ஸ்னாக்ஸ் ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
fish balls
fish balls

கடல் உணவுகளில் மீன்கள் மிக சிறப்பான உணவு ஆகும். மீன்களில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் ஒமேகா 3 ஆசிட் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த மீனை வைத்து ‘Fish Balls’ எப்படி செய்வது என பாப்போம்.

தேவையான பொருட்கள்

fish ingredients
fish ingredients

மீன் – 1 கிலோ

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிது

பூண்டு – 3 பல்

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

Bread crumbs

சோளமாவு – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் மீனில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து தடவி பிறகு அதனை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பொரிக்கவும். பொரித்த மீனை ஆறவைத்து முள்ளை எடுத்து உதிரியாக்கவும்.

crumbed-fish-balls-with-green-
crumbed-fish-balls-with-green-

இப்பொழுது கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் உதிர்த்து வைத்த மீன், மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். நன்கு வதங்கியதும் அதை இறக்கி சிறிது சோளமாவு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டவும்.

fish balls
fish balls

இப்பொழுது ஒரு பௌலில் சோளமாவை போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கி உருட்டி வைத்த உருண்டையை அதில் போட்டு பிறகு Bread crumbs இல் பிரட்டி சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ‘Fish Balls’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here