இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,174 பேர் பலி!!

0
Corona death
Corona death

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் ஒரே நாளில் 1,174 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு எண்ணிக்கை 85,000 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை மொத்தம் 52,14,678 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 10,17,754 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அதே சமயம் 41,12,552 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Corona
Corona

கொரோனா இறப்பு விகிதம் 1.63 சதவீதத்தை எட்டியுள்ளது, குணமடைபவர்கள் விகிதம் 78.64 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, செப்டம்பர் 16 வரை 6,15,72,343 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில், கடந்த 24 மணி நேரத்தில் 10,06,615 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதற்கிடையில், உலகளாவிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் 9,44,604 ஆக உயர்ந்துள்ளன. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 6,674,070 பேர் பாதிக்கப்பட்டு 197,615 பேர் உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here