கொரோனா பாதித்த கர்நாடக பாஜக எம்.பி உயிரிழப்பு – கட்சியினர் அதிர்ச்சி!!

0

கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் ஆன அசோக் காஸ்தி காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்பால் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எம்.பி உயிரிழப்பு:

கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமான நபர் காஸ்தி. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான இவர் ஏபிவிபி செயல்பாட்டாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் 18 வயதாக இருந்தபோது பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றிருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுக்கே பயந்தா எப்படி, இனி தான் ஆட்டமே ஆரம்பம் – கொரோனா குறித்து WHO எச்சரிக்கை!!

பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அசோக் காஸ்தி செப்டம்பர் 2 ஆம் தேதி பெனக்லூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) ஆதரவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here