அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி. மீ முதல் 40 கி. மீ வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு துறையில் பணிபுரியும் தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.,அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here