கர்ம வினைகளுக்கு நிரந்தர தீர்வு – இந்த பரிகாரங்களை செய்தால் போதும்!!

0
karmaa
karmaa

ஒருவரின் கர்மவினை பயன்களை வைத்தே அவர்களின் எதிர்கால வாழ்க்கை அமையும் என சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நம் முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் சுக துக்கங்கள் அமைகிறது. இதனை குறைத்து வாழ்வில் செல்வாக்கை பெற சில வழிமுறைகள் உள்ளன.

கர்ம வினை பயன்

நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், துயரங்கள் அனைத்திற்கும் காரணம் நமது கர்ம வினை பயன் தான். இதற்கு நிரந்தர தீர்வுகள் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு பரிகாரங்கள் மூலம் தீர்வுகள் உள்ளன. முடிந்த வரை ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும். நாம் 2 ரூபாய் சம்பாதித்தாலும் கால் அளவிற்காவது தானம் அளிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

help
help

உதவி என்று தேடி வந்தவர்களுக்கு இருந்தும் கொடுக்காமல் இருப்பது, அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவது உள்ளிட்ட செயல்களே கர்ம வினைக்கு வழிவகுக்கும். இதனை நாம் முன் ஜென்மத்தில் செய்தாலும் சரி, இப்பொழுது செய்தாலும் சரி வினை பயனை அனுபவித்தே ஆக வேண்டும். முடிந்த வரை நல்ல செயல்களிலே ஈடுபடும் பழக்கத்தை வளர்த்துக்கொளுங்கள்.

karma
karma

கர்ம வினை பயனை குறைக்க இறைவழிபாடுகள் உள்ளன. அத்தனையும் தாண்டி அதன்பிறகு நாம் செய்யும் செயல்களை பொருத்தே அந்த வினைப்பயன்கள் பிரதிபலிக்கும். கர்ம வினைப்பயனை குறைக்க, கடன் பிரச்சனை அகல, நிரந்தர வேலை கிடைக்க சில பரிகாரங்கள் உள்ளன. கோவிலுக்கு வருபவர்களுக்கு பசும்பால். மாதுளம்பழம், எலுமிச்சை பலம், நெல், வெல்லம். பசு நெய், தேங்காய் போன்ற பொருட்களை தனமாக கொடுங்கள். இவற்றை தனி தனியாகவும் அளிக்கலாம். அல்லது ஒரு இனிப்பு பதார்த்தங்கள் செய்தும் தானமாக அளிக்கலாம்.

annathanam
annathanam

மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கடவுள் பெயரை சொல்லி அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கலாம். ஏழை பெண் ஒருவருக்கு உங்கள் சொந்த செலவில் திருமணம் செய்து வைக்கலாம். முடிந்த வரை எளியவர்களுக்கு உதவுங்கள். பண்டிகை தினத்தன்று உங்கள் குழந்தைக்கு மட்டுமன்றி கஷ்டப்படும் எளியவர்களுக்கும் புத்தாடை வாங்கி கொடுங்கள். இதனால் அவர்களின் உள்ளம் குளிரும் போது உங்கள் பாவகணக்கும் குறையும். எனவே ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here