Saturday, May 4, 2024

இந்திய அரசின் நிதியுதவியில் மொரிஷியஸ் உச்சநீதிமன்றம்!! திறந்து வைக்கும் பிரதமர் !!

Must Read

மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, பிரதமர் திரு.நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமர்திர் திரு.பிரவீன் ஜென்னாத்தும், 30 ஜுலை, 2020 வியாழக்கிழமையன்று கூட்டாகத் திறந்துவைக்கஉள்ளனர்.

திறப்புவிழா

மொரீசியஸ் நீதித்துறையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் இருநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், காணொளிக்காட்சி வாயிலாக இந்த திறப்புவிழா நடைபெற உள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், அந்நாட்டின் தலைநகரமான போர்ட் லூயி நகரில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கட்டமைப்புத் திட்டம் ஆகும்.

புதிய திருப்பம் ⇛⇛⇛ நடிகர் சுஷாந்த் மரணத்தில் புதிய திருப்பம்!! காதலி மீது புகார்!!

நிதி வழங்கிய இந்தியா

2016-ஆம் ஆண்டு, இந்தியஅரசு 353 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் வழங்கிய ‘சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு’மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒன்றாக, புதிய உச்சநீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்தத்திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், மதிப்பீட்டைவிட குறைவானசெலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிநவீன வடிவமைப்பில், வெளிப்புற வெப்பம் மற்றும் ஒலி ஊடுருவாமல், எரிசக்தி சிக்கனம் உள்ளிட்ட பசுமை அம்சங்களுடன் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டிடம்

இந்தப் புதிய கட்டடத்தில், மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைவதால், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின் கீழ், மொரீசியஸில்நாட்டில் 100 படுக்கை வசதிகளுடன் கூடியஅதிநவீன இ.என்.டி. மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வாய்ப்புகள்

மொரீசியஸ் நாட்டில், இந்திய உதவியுடன் உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்புத்திட்டங்கள், மொரீசியஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இந்திய நிறுவனங்களுக்கு மாபெரும் வாய்ப்பை உருவாக்கும் என இந்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -