தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தப்போவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

தேர்தலில் பறக்கும் படைகள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வன்முறையின்றியும் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம், தேர்தல் நடக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தவுள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நடக்கும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு தொடர்ச்சியாக செயல்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என கூறியுள்ளார். இதன்படி 234 சட்டமன்ற தொகுதிகளில் 702 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில், சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளின் உதவிக்கு, துணை ராணுவப்படையினரின் 330 கம்பெனிகள் தேவைப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமல்ஹாசன் – வைரலாகும் புகைப்படம்!!

இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஏற்கனவே துணை ராணுவப்படையின் 45 கம்பெனிகள் தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் துணை ராணுவப்படையின் 15 கம்பெனிகள் மீண்டுமாக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் துணை ராணுவப்படையின் 300 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here