’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

0

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

80 வயதிற்குமேற்பட்ட வாக்காளர்கள்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபர்களின் புள்ளி விவரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த தகவலின் படி வாக்குகளை செலுத்தும் தேர்தல் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த யாஷிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

தமிழகத்தில் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களின் பட்டியலில் மொத்தம் 6,26,74,446 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 3,08,38,473 பேரும், பெண்கள் 3,18,28,727 பேரும், மூன்றம் பாலினத்தவர் 7,246 பேரும் உள்ளனர். இதில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் 12.91 லட்சம் வாக்காளர்கள் ஆவர். இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்ததாவது, ‘தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளனர். இந்த வயதுடைய வாக்காளர்கள் அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 பேரும், குறைந்த பட்சமாக நீலகிரியில் 8,253 பேரும் உள்ளனர்’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here