‘எடப்படியார் என்றும் முதல்வர்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்!!

0
Edappadi-K-Palaniswami
Edappadi-K-Palaniswami

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? என்கிற விவாதம் அமைச்சர்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

2021 முதல்வர் வேட்பாளர்:

தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2வது இடத்தில திமுக பல இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உள்ளது. முதல்வர் ஆக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல் அமைச்சராக பதவியேற்றார். ஓ பன்னீர் செல்வம் அவர்கள் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்காலம் முடிவடைகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

minister rajendra balaji
minister rajendra balaji

இதனால் தேர்தல் நடவடிக்கைகள் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இரு பிரதான கட்சிகளும் புதிய நிர்வாகிகள் என பல மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2021ம் ஆண்டு அதிமுக முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பாரா அல்லது ஓ பன்னீர் செல்வம் இருப்பாரா என்பதில் அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

minister sellur raju
minister sellur raju

ஏற்கனவே இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், அதிமுக.,வை இரு தலைவர்கள் வழிநடத்துகின்றனர். தேர்தலுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், “எடப்பாடியார் என்றும் முதல்வர்!! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்!எடப்பாடியாரை முன்னிறுத்தி களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே!” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here