டாஸ்மாக் கடைகளில் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி!!

0
tasmac credit card sales
tasmac credit card sales

தமிழகத்தில் இயங்கி வரும் 5330 மதுபான கடைகளில் இனி மதுபிரியர்கள் கிரெடிட் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகம் பணம் கொடுத்து சரக்கு விற்பதையும் வாங்குவதையும் தடுக்க இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கிரெடிட் டெபிட் கார்டு மூலம் மது விற்பனை

தமிழ்நாட்டில் 5330 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது அதை வாங்கும் மதுபிரியாக்கள் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர், அதுமட்டுமில்லாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது எனவே இதை தடுக்க பாயிண்ட் ஆஃப் சேல் என அறிமுகப்படுத்தியுள்ளது.

tasmac wine shop
tasmac wine shop

டாஸ்மாக் கடைகளை மின்னனு இயந்திரங்களில் மதுபிரியர்கள் அவர்களது கிரெடிட், டெபிட், விசா கார்டு பயன்படுத்தி மது வாங்கிக்கொள்ளலாம், இதற்கான ஒப்பந்த டெண்டரை வெளியிட்டுள்ளது அரசு. அதில் 7 வங்கிகள் பங்குபெற்று அதில் மிக குறைந்த ஒப்பந்த புள்ளிகளில் தொகை குறிப்பிட்டு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மின்னணு விற்பனை எந்திரங்கள் பொருத்துவதற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

credit debit cards
credit debit cards

ஒப்பந்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது.இனி மின்னணு விற்பனை எந்திரங்கள் மூலம் டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி மதுபான கடைகளில் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் . மின்னணு விற்பனை எந்திரங்கள் பயன்படுத்துவதான பயிற்சிகள் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.அடுத்த வாரம் முதல், மது கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வைக்கும் பணியை துவக்கி, இரு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here