வலிமை படத்தின் புதிய அப்டேட் – யுவன் சங்கர் ராஜா வெளியீடு!!

0

தல அஜித் நடிக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போது வலிமை படத்தை பற்றிய ஓர் அப்டேடை யுவன் சங்கர் ராஜா தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வலிமை:

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின்பு அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் வலிமை. இந்த படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அஜித் மற்றும் யுவன் இந்த படத்தின் மூலம் 8வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். சுமார் ஒரு வருட காலமாக இந்த படத்தை பற்றிய ஒரு அப்டேட்டும் வராத காரணத்தினால் தல ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து பலமுறை கேட்டு வருகின்றனர். தற்போது சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதனால் வலிமை படமும் ஓடிடியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் அச்சமடைந்தனர் ஆனால் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது இந்த படத்தை பற்றிய ஓர் அப்டேடை இசையமைப்பாளர் யுவன் தற்போது தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

86 நாடுகளில் பரவிய உருமாறிய கொரோனா – உலக சுகாதார மையம் தகவல்!!

அவர் கூறியதாவது, வலிமை படத்தின் முதல் பாடல் குத்து பாடல். தற்போது அந்த பாடலின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலுக்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து டிரம்ஸ் கலைஞர்களை வர வைத்து இசையமைத்துள்ளாராம். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தற்போது இந்த தகவலினால் தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here