86 நாடுகளில் பரவிய உருமாறிய கொரோனா – உலக சுகாதார மையம் தகவல்!!

0

பிரிட்டனில் இருந்து தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த உருமாறிய கொரோனா வைரஸ் 86 நாடுகளில் பரவியுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை துன்புறுத்தி வருகிறது. இன்னும் கொரோனாவில் இருந்து எந்த ஒரு உலக நாடும் முழுவதுமாக மீளவில்லை. தற்போது அனைத்து நாடுகளிலும் அவசர கால பயன்பாட்டிற்காக மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. வைரஸ் என்றாலே உருமாறும் தன்மையை கொண்டது. அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி பரவத்தொடங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வைரஸ் முந்தைய வைரஸை விட 75 சதவீதம் ஆற்றல் மிக்கது, மேலும் இது வேகமாக பரவும் ஆற்றலை கொண்டது என்று மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் சிலர் இங்கிலாந்து நாட்டுடன் விமான சேவையை ரத்து செய்துள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தினர்.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!!

தற்போது இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஓர் தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்த உருமாறிய கொரோனா 86 உலக நாடுகளில் பரவியுள்ளதாம். மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் 63 சதவீதமாக இருந்த தொற்று கடந்த ஜனவரி மாதத்தில் 90 சதவீதமாக உயர்ந்துள்ளதாம். மேலும் கூடுதலாக கண்டுபிடிக்கப்பட்ட 2 வகை கொரோனா வைரஸும் பரவி வருவதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here