அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!!

0

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

இங்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் மக்கள் ஆர்வமுடன் தங்க நகைகளை வாங்கி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் நகை வாங்க காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலை மாற்றத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய திணறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய கெட்டப்பில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – வெளியான புகைப்படம்!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,176க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமிற்கு ஆபரணத் தங்கம் ரூ.15 குறைந்து தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,522க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 1 கிராம் வெள்ளி தற்போது ரூ.74.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.74,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here