புதிய கெட்டப்பில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – வெளியான புகைப்படம்!!

0

‘குக் வித் கோமாளி’ சீசன் 2வின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் புதிய வேடங்களில் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் கெட்டப் தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

ஷிவாங்கியின் புதிய கெட்டப்:

ஒவ்வொரு வாரமும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளிகள் புதிய கெட்டப்களுடன் தோன்றுவது வழக்கம். ஒவ்வொரு வேடமும் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஷிவாங்கிக்கும், புகழுக்கும் மிக அழகாக பொருந்தும். சென்ற வாரம் மட்டும் எந்த விதமான வேடங்களும் இல்லாமல் சாதாரண உடையில் வந்தார்கள் கோமாளிகள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த வாரத்திற்கான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் மீண்டுமாக கோமாளிகள் வித்தியாசமான வேடங்களில் கலந்து கொண்டுள்ளனர். ‘விஜய் டிவி எப்படித்தான் இப்படி யோசிக்குறாங்களோ?’ என கேட்கும் அளவுக்கு கோமாளி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேடங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் சட்டமன்ற தேர்தல் – அதிமுக கோரிக்கை!!

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஷிவாங்கிக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடம் அச்சு அசலாக அவருக்கே செய்துள்ளது போல உள்ளது. அது என்னவென்றால் கார்ட்டூன் கதாபாத்திரத்தில் வரும் டோராவின் வேடம். பொதுவாக டோராவை போல தான் சிவாங்கியின் நடையும், பேச்சும் இருக்கும். தற்போது அதே வேடம் கிடைத்துள்ளதினால் சொல்லவே வேண்டியதில்லை. கண்டிப்பாக இந்த வார குக் வித் கோமாளி எபிசோட் கலக்கலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here