அரசியலுக்கு வரும் நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் – பாஜக.,வில் ஐக்கியம்!!

0

நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். அதற்காக பாரதிய ஜனதா கட்சியில் நாளை இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவாஜியின் மகன் ராம்குமார்

சினிமா பிரபலங்கள் பலரும் அரசியலில் கால்பதிக்க வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். முன்னதாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சினிமாவையே பின்புலமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். 69 வயதான ராம்குமார் ஒரு திரைப்பட தயாரிப்பாளர்.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!!

தமிழில் வெளியான ‘சந்திரமுகி’ உள்ளிட்ட சில படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு திரைப்பட நடிகர்கள், நடிகைகள் பலரும் அரசியலில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். நடிகை குஷ்பு ஏற்கனவே பாஜக.,வில் இணைந்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளர் ராம்குமார் பாஜக.,வில் இணையவுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்காக தமிழக பாஜக தலைவர் முருகனை கமலாயத்தில் சந்தித்து பேசினார். பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளதால் தான் பாஜக அரசியலில் இணைந்து பணியாற்ற உள்ளதாக’ தெரிவித்துள்ளார். தொடர்ந்து சென்னையின் துணை மேயர் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here