பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் – இதோ உங்களுக்காக!!

0
health-tips-for women
health-tips-for women

பெண்கள் தனது ஆரோக்கிய விஷயத்தில் எப்பொழுதும் கவனக்குறைவுடனே இருக்கின்றனர். அன்றாடம் நாம் செய்யும் வேலைகளிலேயே முழு கவனம் செலுத்துவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதில்லை. இதனால் தான் பெண்கள் பல உடல்நிலை பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

பெண்கள்:

பெண்கள் அதிகமாக செய்யும் தவறு என்னவென்றால் பாதிப்புகளின் தொடக்கத்தில் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால் தான் நோய் தொற்றும் அதிகரிக்கிறது. நமக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது மட்டும் மருத்துவமனைக்கு செல்வது தவறு. மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும்.

safety for women
safety for women

மாதவிடாய் சமயத்தில் வயிற்றுவலி காரணமாக மாத்திரை, மருந்துகள் உட்கொள்வது கூடாது. ஏனெனில் இது பெரிய அளவில் இல்லையெனினும் எதிர்காலத்தில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். முடிந்த வரை தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காரமான உணவுகளை தவிர்த்து எளிமையான உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி கட்டுப்படும். அதிகமான உதிரிபோக்கு, அல்லது குறிகிய கால மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கு கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

doctor consultant
doctor

இதனை சாதாரணமாக எண்ணி விடுவதால் தான் பிசிஓடி பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிசிஓடி பிரச்சனை இல்லாத பெண்களே குறைவாக உள்ளன. இதற்கு சிறுவயதிலேயே பூப்பெய்தல், சரியான உணவு கட்டுப்பாடு இல்லாமை & உணவு முறைகள் போன்றவையே காரணம்.

WOMEN-EXERCISING
WOMEN-EXERCISING

பெண்கள் ஆண்களை விட அதிகம் தூங்க வேண்டுமாம். அதாவது ஆண்கள் 6 மணி நேரம் தூங்க வேண்டும் என்றால் பெண்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இதனை சில பெண்கள் கடைபிடிப்பது இல்லை. நல்ல தூக்கமே ஒருவரின் உடல்நலத்தை காக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பெண்கள் குறைவான ஹீமோகுளோபின்களை கொண்டுள்ளன.

health tips
health tips

மேலும் அதிக பெண்களுக்கு இரும்புச் சத்து மற்றும் புரதச்சத்துகள் குறைவாகவே உள்ளன. இதற்கு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பால், முட்டை, குறைந்த கொழுப்புகள் உள்ள இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது மிக முக்கியமாகும். பெண்களுக்கு 40 வயதை அடைந்ததும் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போதிய உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here