Sunday, May 5, 2024

இந்தியாவில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது – உலக சுகாதாரத்துறை அமைப்பு தகவல்!!

Must Read

உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது என்று உலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் சில அம்சங்களையும் கொடுத்துள்ளது.

மலேரியா பாதிப்பு:

கொசுக்களின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக அளவில் பரவும் ஒரு நோய், மலேரியா. சாதாரண காய்ச்சலாக இருக்கும் இந்த நோய் சில நாட்களில் உடலில் தீவிரம் அடைந்து மரணம் அளவுக்கு கூட ஒருவரை இழுத்து செல்லும். இந்தியாவில் உள்ளவர்களும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் முக்கியமாக இந்தியாவை பற்றி கூறப்பட்டதாவது, உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவில் தற்போது மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 பாதிப்பு எண்ணிக்கை 4,29,928, பலியானோர் எண்ணிக்கை 96 ஆகவும் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை 3,38,494, பலியானோர் எண்ணிக்கை 77 ஆகவும் இருந்துள்ளது. இப்படியாக ஆண்டுக்கு ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை குறைத்துள்ளது.

பெற்றோர்கள் சம்மதத்தோடு காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டுமா?? ஒருமுறை இந்த கோவிலுக்கு வாருங்கள்!!

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலேரியா பாதிப்பினை ஒலிக்க அரசு சார்பில் பல நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு “தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக தான் பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -