பெற்றோர்கள் சம்மதத்தோடு காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டுமா?? ஒருமுறை இந்த கோவிலுக்கு வாருங்கள்!!

0

காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டுமா? அதுவும் உங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டுமா? இந்த கோவிலுக்கு ஒருமுறை வந்து வணங்கிவிட்டு சென்றால் போதும் நீங்கள் விரும்பியவரையே கைப்பிடிக்கும் பாக்கியம் நிச்சயம் உண்டு.

கோவில் வரலாறு:

பரதமாமுனிவர், பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவனிடம் கடும் தவம் இருக்கிறார். பரதமா முனிவரின் கடும் தவத்தை ஏற்று கொண்ட சிவன் யாக குண்டலத்தில் பார்வதி தேவியை குழந்தையாக பிறக்க செய்தார். சிவனின் முழுமையான பக்தியாக வளர்ந்த பார்வதி சிவனையே கணவனாக நினைத்து காதல் கொண்டால். சிவனின் உருவத்தை மணலில் வரைந்து மனம் உருகி வழிபட்டு வந்தால்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பார்வதி தேவியின் காதலை உணர்ந்த சிவன் தேவியின் முன்பு தோன்றி அவள் கரங்களை பிடித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு பார்வதி தேவி சுவாமி நான் தங்களை மனதார காதலிப்பது உண்மைதான். ஆனால், என் தந்தையின் சம்மதம் இல்லாமல் நான் வர மாட்டேன். ஆகையால், முதலில் என் தந்தையிடம் சம்மதம் பெறுங்கள் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாள். பின் சிவன் அங்கிருந்து மறைந்து விட்டார்.

பார்வதி தேவி சிவனையே நினைத்து கொண்டு தன்னை வருத்தி கொள்கிறாள். சில காலம் கழித்து சிவன் நந்தீஸ்வரரை, பரதமா முனிவரிடம் மணம் பேச அனுப்பி வைக்கிறார். நந்தீஸ்வரரும் சிவனின் கட்டளையை ஏற்று பரதமா முனிவரிடம் பேசுகிறார்கள். பரதமா முனிவரும் சம்மதம் தெரிவிக்கவே சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு குத்தாலத்தில் திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக தான் குத்தாலத்தில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டது.

உங்கள் காதல் திருமணத்தில் முடியுமா?? யாருக்கு காதல் கைகூடும்?? ஆன்மீக விளக்கம்!!

இத்திருத்தலத்தில் சிவபெருமான், “உத்தவேதீஸ்வர்” என்று அழைக்கப்படுகிறார். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நடக்க, இந்த திருத்தலத்திற்கு வந்து வணங்கினால் நிச்சியமாக திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே மனம் உருகி வணங்கினாலும் இறைவன், இறைவியின் அருள் பெற்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here