ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்தியா அசத்தல் வெற்றி!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா (92), விராட் கோஹ்லி (63), ஜடேஜா (66) ரன்கள் விளாசினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 303 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் (75), மேக்ஸ்வெல் (59) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 49.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 289 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

கடந்த 2 போட்டிகளிலும் சொதப்பிய பவுலர்கள் இம்முறை சிறப்பாக பந்துவீசினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3, பும்ராஹ் மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here