ஸ்டெர்லைட்ர் ஆலையை இடைக்கலமாக திறக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0

பராமரிப்பு பணி உள்ளாடிட்ட எந்த பணிக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இடைக்கலமாக திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கை

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்ர் ஆலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடந்ததை அடுத்து தமிழக அரசு கடந்த 2018 மே 28 ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டி வேதாந்தா நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை எதிர்க்கும் வகையில் வேதந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு சமர்பித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த அறிக்கையை வைத்து ஸ்டெர்லைட் ஆலைகளை திறப்பதில் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது என கூறி, ஆலையை மீணடும் திறக்க அணையிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு கொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தலையிட பசுமை தேசிய தீர்ப்பாயத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பு வழங்கியது. இதனால் உயர்நீதி மன்றத்தை அணுகுமாறு உச்சநீதி மன்றம் வேதாந்தா நிறுவனத்திற்கு கூறியிருந்தது. இதனால் தமிழக அரசு ஸ்டெர்லைட்ர் மூட உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நிதிமன்றம் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பேரில், ஸ்டெர்லைட் அலையின் பாராமரிப்பு பணிகாக திறக்க வேண்டும் என்ற வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here