இந்த ஆண்ட்ராய்டு & ஐபோன்களில் ‘வாட்ஸ்அப்’ சேவை நிறுத்தம் – பயனர்கள் ஷாக்!!

0

2021 புதிய ஆண்டின் தொடக்கம் முதல், சில ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ்அப் அதன் சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளது. இந்த மாதத்திற்குப் பிறகு, ஆண்ட்ராய்டு 4.0.3 OS மற்றும் iOS 9க்கு அப்டேட் செய்யாத போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. வாட்ஸ்அப் வழங்கும் அனைத்து சேவைகள் / அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போங்களின் சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபோனைப் பொறுத்தவரை, குறைந்தது iOS 9 மற்றும் அதற்கு மேல் உள்ள சாப்ட்வேர் வரை அப்டேட் செய்ய வேண்டும் மற்றும் Android பயனர்களுக்கு, 4.0.3 அல்லது அதற்கும் மேம்பட்ட லேட்டஸ்ட் அப்டேட்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஐபோன் 4 வரையிலான மாடல்களில் இனி வாட்ஸ்அப் இருக்காது. ஐபோன் 4 எஸ், ஐபோன் 5, ஐபோன் 5 எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஐஓஎஸ் 9 அல்லது லேட்டஸ்ட் சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும்.

ஏர்டெல், ஜியோவை பின்னுக்கு தள்ளும் பிஎஸ்என்எல்!!

ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை, எச்.டி.சி டிசையர், மோட்டோரோலா டிரயோடு ரேஸ்ர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களில் 2021 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இவை தவிர, பெரும்பாலான போன்கள் Android 4.0.3 இல் வேலை செய்கின்றன. இதனால் இந்த போன்களை வைத்திருக்கும் பயனர்கள், வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here