ஏர்டெல், ஜியோவை பின்னுக்கு தள்ளும் பிஎஸ்என்எல் – அதிரடி ஆஃ பர் அறிவிப்பு!!

0

தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது புது அதிரடியான ஆஃபரை அறிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.

தனியார் நிறுவங்களுடன் போட்டிபோடும் பி.எஸ்.என்.எல்:

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனியார் டெலிகாம்களுடன் போட்டி போட்டு வருகின்றன. அதற்காக பல அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா காலத்தில் டேட்டா வின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் டேட்டா பயன்பாடு அனைவர்க்கும் அதிகரித்துள்ளது. எனவே அனைத்து டெலிகாம் நிறுவனமும் டேட்டா ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இத்திட்டம் WORK FROM HOME பிளான் என்ற பெயரில் வெளியாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதற்காக 3 விதமான விலை பட்டியலை அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க டேட்டா திட்டம் . பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள 3 திட்டங்களின் விவரம்: ரூபாய் 56 க்கு பத்து நாட்களுக்கு மொத்தம் 10 ஜிபி டேட்டா, அடுத்ததாக ரூபாய் 151 க்கு ரீசார்ஜ் செய்தால் 40 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு மட்டும், அதேபோல் ரூபாய் 251க்கு 70ஜிபி டேட்டா இதுவும் 28 நாட்களுக்கு என்ற அதிரடி பிளான்களை அறிவித்துள்ளது.

அழகான சிவந்த உதடுகளை வீட்டிலேயே பெற வேண்டுமா??

தற்போது தனியார் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், VI நிறுவங்களின் உள்ள திட்டங்களில் 50ஜிபி டேட்டாவிற்கு 251 ரூபாயும், 100ஜிபி டேட்டாவிற்கு 351 ரூபாயும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். மற்றொரு நிறுவனமான ஜியோவில் 151 ரூபாய்க்கு 30 ஜிபியும், 201 ரூபாய்க்கு 40 ஜிபியும், 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. எனவே பார்த்தாலே தெரிகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம் போல் வேறு எந்த நிறுவனமும் அதிகமான சலுகைகளை தரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here