அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பிரம்மாண்ட மசூதி – மாதிரி வரைபடம் வெளியீடு!!

0

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பாபர் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமையவிருக்கும் மசூதிக்கான மாதிரி வரைபடம் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ராமர் கோவில் கட்டவேண்டுமென வலியுறுத்தி விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த போராட்டக்கார்களால் கடந்த டிசம்பர் 6-1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இருதரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கடந்த 2019 நவம்பரில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டவும், பாபர் மசூதி கட்டுவதற்கு தனி இடத்தினை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி!!

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் சூடு பிடித்துள்ளதை தொடர்ந்து மசூதி கட்டுவதற்கான பணிகளை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு தொடங்கியுள்ளது. மசூதிக்கான மாதிரி வரைபடம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் ஒரு அருங்காட்சியகமும், மசூதியின் பிற்பகுதியில் ஒரு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here