சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

0

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை தரிசனம்:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறிது சிறிதாக கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலும் கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாள்தோறும் 2000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் 3000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் புக்கிங், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கேரள அரசிடம் முறையிடப்பட்டது.

முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்காவிட்டால், தனித்து தான் போட்டி!!

மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று முதல் (டிசம்பர் 20) சபரிமலையில் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது எனவும் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here