‘கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு தாடி வளரலாம், ஆண் குரலில் கூட பேசலாம்’ – பிரேசில் அதிபர் பேச்சால் வெடித்த சர்ச்சை!!

0

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியை தொடங்கி விட்ட நிலையில் பிரேசிலும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த கேள்விக்கு பிரேசில் அதிபர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 Brazil’s President Jair Bolsonaro 

அண்மையில் தங்கள் நாட்டு மக்களுக்கு ஃபைசர் தயாரித்த கொரோனா தடுப்பூசியை கொடுக்க அனுமதித்த பிரேசில், சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, நிறுவனம் பொறுப்பாகாது எனவும், இது தொடர்பான அவர்களின் ஒப்பந்தத்தில் இந்த விஷயம் தெளிவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் வயதாகிவிட்டால், பெண்ணிற்கு தாடி வளர்ந்தாலோ, ஆண் குரலில் பேசினாலோ அல்லது தொண்டை புண் ஏற்பட்டாலோ அதற்கும் மேல் அவர்கள் முதலையாக கூட மாறினாலும், அவர்களின் பிரச்சினைக்கும் ஃபைசர் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அது உங்களுடைய பிரச்னை என்று பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த இந்தியா திட்டம்!!

இதனால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு நாட்டின் அதிபரின் பொறுப்பற்ற இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் உட்பட பல நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது அறியப்படுகிறது.

ஏற்கனவே பிரேசிலில் 1,84,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் தினசரி 1000 பேர் அங்கு கொரோனாவால் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here