மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த இந்தியா திட்டம் – பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்!!

0

கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவே மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டிருப்பதாக பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாராமுல்லா மாவட்டம் உரி எனும் இடத்தில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தின் டோக்ரா படை மீது கடந்த 2016 செப்டம்பர் 17ல் பாகிஸ்தான் ராணுவத்தால் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. திடீரென அத்துமீறி எல்லைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டு, துப்பாக்கி முதலிய ஆயுதங்களால் தாக்கியதில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

கமல் கைக்கு மாறும் ‘டார்ச் லைட்’ சின்னம்??

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு எனவும் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் , செப்டம்பர் 28 துவக்கி 29 அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்த இந்தியா ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனும் தாக்குதலை நடத்தினர். இதில் 7 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. தாக்குல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத்தின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முதலில் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிறகு ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மஹமூத் குரோஷி “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீதான ஒரு சர்ஜிக்கல் தாக்குதலுக்கு தயாராவதாககூறி அச்சம் தெரிவித்துள்ளார். அதோடு எங்களது உளவு துறை மூலம் கிடைத்த தகவல்கள் இதை உறுதி செய்கின்றன” எனவும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த வியாழக்கிழமையன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த குரோஷி காஷ்மீர் குறித்தும், இந்தியா காஷ்மீரில் மனித உரிமைகளை மீறுகிறது எனப் புகாரளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here