கமல் கைக்கு மாறும் ‘டார்ச் லைட்’ சின்னம்?? எம்ஜிஆர் மக்கள் கட்சி திடீர் பல்டி!!

0

தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தமக்கு விருப்பமில்லையெனவும், அச்சின்னம் தமது MGR மக்கள் கட்சிக்கு தேவையில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லையெனவும், அந்த சின்னம் தேவையில்லை எனவும் MGR மக்கள் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டார்ச் லைட் சின்னம் வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு அந்த சின்னம் புதுச்சேரியில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்படவில்லை. எனவே அதை தமிழகத்திலும் வழங்கக்கோரி அக்கட்சியின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா – திணறும் மம்தா பானர்ஜியின் அரசு!!

இந்நிலையில் MGR மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் தலைவர் அதனை வேண்டாமென மறுத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் கமல்ஹாசனின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here