மத்திய அரசின் பனோரமா விருது – நடிகர் தனுஷின் ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு!!

0

2020 -ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதிற்கு தமிழ் படங்களான, நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்த ‘தேன்’ படமும் தேர்வாகியுள்ளது .

அசுரன்:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த திரைப்படம் அசுரன். இது கடந்த 2019 -ம் ஆண்டில் அக்டோபர் 4-ம் தேதி வெளிவந்தது. வெளிவந்த நாளில் இருந்தே பல பாராட்டுக்கள் மற்றும் பல விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை திரைப்படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக அசுரன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றியை ருசித்தனர்.

தேன்:

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்த தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் கைப்பற்றி அடுத்த ஆண்டு வெளியிடுகிறார்.

வத்திக்குச்சியில் இருந்து காட்டுப்பூச்சியாக மாறிய வனிதா!!

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். நம் நாட்டில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருது வழங்கும் சர்வதேச திரைப்பட விழாவானது கோவாவில் நடக்கவிருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here