சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற இன்றே கடைசி நாள் – இல்லனா பொங்கல் பரிசு ரூ.2500 கிடையாது!!

0

வருடம் தோறும் நியாயவிலை கடைகள் மூலமாக பொங்கலையொட்டி மாநில அரசு மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி வருகின்றது. அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை என பொங்கல் கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த ஆண்டில் பண பரிசும் ரூ.2500 வழங்கப்பட் உள்ளது. இந்த பொங்கல் பரிசு அரிசி அட்டைகள் வைத்திருக்கும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும், சர்க்கரை அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

tn ration shops

இதை தொடர்ந்து கடந்த ஆண்டே ஏராளமானோர் தங்களது சர்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றி தரக்கோரி விண்ணப்பிப்பதத்திருந்தனர். அதை ஏற்று முதல்வர் பழனிச்சாமி அவர்களும் ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் ரேஷன் கார்டுகளை மாற்றிய பலரும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுகளை பெற்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது மாற்றிக் கொள்ளாத மேலும் 5.8 லட்சம் மக்கள், அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தனர். இது பற்றி மாநில அரசின் உணவு மற்றும் நுகர் பொருள் துறைக்கு எடுத்து கூறப்பட்டது. இதனை ஆராய்ந்த அமைச்சர் காமராஜ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில் ‘சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றி கொள்ள முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மாற்ற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை www.tnpds.in என்ற இணையதளத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

tn ration shops

இல்லையென்றால் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார வழங்கல் அதிகாரியிடமோ உதவி ஆணையர்களிடமோ வழங்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் மனுதாரரின் தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டில் மாற்றம் செய்யப்படும் எனவும், விண்ணப்பங்களை அளிப்பதற்கு 20/12/2020 கடைசி நாள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் பலரும் தொடர்ந்து தமது அட்டைகளில் மாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி சேலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் நேற்று மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வரும் பொங்கல் தின பரிசாக குடும்ப அட்டை ஒவ்வொண்டிற்கும் தலா. ரூ.2500 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அரிசி அட்டைதார்களுக்கு வழக்கமாக பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டரை மடங்கு அதிக பணபரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பலன் சர்க்கரை அட்டைதார்களுக்கு கிடைக்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களை வேகமாக மாற்றம் செய்ய தூண்டியுள்ளது என்றே கூறலாம்.

முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்காவிட்டால், தனித்து தான் போட்டி – அதிமுக பதிலடி!!

ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய இன்றே கடைசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் (டிசம்பர்-20ம் தேதி) மாற்றம் செய்யாவிட்டால் பொங்கல் பணபலன்கள் எதுவும் கிடைக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

Pongal Prize

இந்நிலையில் இந்த பொங்கல் பரிசு, வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டிய முதல்வரின் சுயநல அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம், முதல்வர் பழனிசாமி “கொரோனா, புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் துன்பத்தை துடைக்கவே தான் அந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் , ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு கஷ்டத்தில் இருப்பவர்களின் துயரம் புரியும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here