முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்காவிட்டால், தனித்து தான் போட்டி – அதிமுக பதிலடி!!

0
Minister Jeya Kumar
Minister Jeya Kumar

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் கூட்டணி பேரமும் சூடு பிடித்த்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்குள் சண்டையும் சமாதானமுமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக வின் மாநில தலைவர் L.முருகன் அரியலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, “தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் அறிவிக்கும் எனவும், இருந்தபோதிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும்” எனவும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

l murugan
l murugan

இதுகுறித்து இரு கட்சியை சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பாஜக வின் தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இது பற்றி கூறும்போது “தேர்தல் கூட்டணி தொடர்வதாக அதிமுக கூறியதை தொடர்ந்து அதுகுறித்த பாஜக நிலைப்பாட்டை தலைமையே முடிவு செய்யும் எனவும், அப்படி பார்த்தால் L.முருகனின் கருத்து சரிதான்” என்றும் தெரிவித்தார்.

பாஜக.,வில் இணைந்த 9 எம்எல்ஏ.,க்கள் – மம்தா பானர்ஜி ஷாக்!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, L.முருகனின் இந்த கருத்தை ஏற்க முடியாது, அதிமுக தனது முதல்வர் வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அவர் அப்படி பேசியது ஏற்புடையது அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 1977 முதல் தொடர்ந்து நடைபெற்ற 10 தேர்தல்களில் தொடர்ந்து 7 முறை அதிமுகவே பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது என்பதை மீண்டும் நினைவூட்டியதுடன், பாஜக உடனான கூட்டணியில் மாற்றம் எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் MP அன்வர் ராஜா “அதிமுக தனது முதல்வர் வேட்பாளரை ஏர்கனவே அறிவித்து விட்டது. பாஜக எங்களுடன் கூட்டணியை தொடர விரும்பினால் எங்களது தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தனித்துதான் போட்டியிட வேண்டும், எங்களுடன் கூட்டணியில் தொடர இயலாது. அரசியலுக்கு புதியவரான L.முருகனின் சொந்த கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here