Tuesday, May 7, 2024

8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Must Read

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கனமழை:

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதமே துவங்கிவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை வானிலை மையம் சார்பில் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கான வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் 12 செ.மீ, நீலகிரியில் உள்ள குன்னுர் பகுதியில் 9 செ.மீ, தேனி, குண்டலூர் பகுதிகளில் 8 செ.மீ, பாளையம்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்தகாற்றழுத்த தழுவு நிலை குமரி, லட்சத்தீவு, கேரள கரையோரம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -