Friday, May 17, 2024

லடாக் சீனாவில் உள்ளதாக தவறாக கூறிய ட்விட்டர் – எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம்!!

Must Read

இந்தியாவின் பகுதியான லடாக்கினை, சீனாவின் பகுதியாக தவறான வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைதளமான அமெரிக்காவை சேர்ந்த ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

ட்விட்டர்:

சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த மோதலில் இரு நாட்டிற்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் மனஉளைச்சலில் இருந்தனர். எனவே சீன நாட்டின் தயாரிப்பு மற்றும் அனைத்து விதமான சீன பொருட்களையும் நம் இந்திய நாட்டில் தடை செய்தனர். இதனால் பெரும் நஷ்டத்தை கண்டது சீன நாடு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், இந்தியாவில் உள்ள லடாக் பகுதி, சீனாவில் உள்ளதாக ஒரு தவறான வரைபடத்தை ட்விட்டர் வெளியிட்டது. டுவிட்டரின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் கிரிமினல் குற்றத்திற்கு சமம் எனவும் கடுமையாக கூறினார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேஹி. எனவே ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவாகிகள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மீனாட்சி லேஹி வலியுறுத்தினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தவறான வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் இன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கோரியது. மேலும் டுவிட்டர் அமெரிக்காவின் தலைமை அதிகாரி டேமியன் கேரின் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தவறு இம்மாதம் 30ஆம் தேதிக்குள் கட்டாயமாக திருத்தப்பட்டுவிடும் என்றும் உறுதிபட தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -