கொரோனா பயத்தால் தொடரும் தற்கொலைகள் – மனநல ஆலோசனைகள் பெற வேண்டுமா..!

0

கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த அவர் மனமுடைந்து சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிர்கொல்லி கொரோனா..!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800ஐ தாண்டியுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனாவின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனிடையே, கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த ஒருவருக்கு சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட உபாதைகள் இருந்துள்ளது. இதனால் இவருக்கு கொரோனா இருக்குமா என கருதிய அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடியோவால் மனமுடைந்து தற்கொலை..!

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அதனை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். கொரோனா பாதித்தவர் என்ற தலைப்பில் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனால், மனமுடைந்த அவர் சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் அதனை போக்கும் வகையில், +91-11-23978046, 1075, 044-29510500 உள்ளிட்ட உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது. Mind Zone எனும் மனநல சிகிச்சை மையம் கொரோனா தொடர்பான இலவச ஆலோசனைகளுக்கு 9444020006 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here