கொரோனா தடுப்பு நிதியாக 100 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த டிக் டாக் (TikTok)..!

0

இந்தியாவில் வைரஸ் தாக்கத்தால்பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களால் முடிந்த நிதியை அனைவரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் நிறுவனம் 100 கோடி நிதி வழங்கி உள்ளது.

டிக் டாக் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா-வை விடவும் வேகமாக வளர்ந்து வரும் டிக்டாக்-இன் இந்தியா கிளை சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை கொரோனாவை விரட்ட அரசுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. இதோடு 4,00,000 Hazard பாதுகாப்பு உடல் கவசம் மற்றும் 2,00,000 மாஸ்க் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு உதவிய முக்கியமான இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டிக்டாக் இந்தியாவும் இணைந்துள்ளது.

CBSE-யில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் – மனிதவள மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு..!

இதுகுறித்து டிக்டாக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தின் துணையுடன், பாதுகாப்புக்குத் தேவையான சாதனங்களை முறையான தரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்க் அனைத்தும் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது டிக்டாக் இந்தியா.

ஸ்னாப்டீல் நிறுவனம்

டிக்டாக் போல் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக ஸ்னாப்டீல் நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்துள்ளனர். இதேபோல் பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் சர்மா தனது 2 மாத சம்பளத்தைக் கொடுத்துள்ளார்.

ஓலா, ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனம்

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பாவீஷ் அகர்வால் தனது ஒரு வருட சம்பளத்தைத் தங்கள் நிறுவன ஓட்டுநர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளார். இதேபோல் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனமும் தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here