இந்தியாவில் கொரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள் – மத்திய அரசு தீவிர கண்காணிப்பு..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவ காரணமாக இருந்த 10 இடங்கள் குறித்த விபரங்களை கண்டறிந்த மத்திய அரசு அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

எந்தெந்த இடங்கள்..?

டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் இந்த பட்டியலில் உள்ளன. விபரங்கள்:

  1. டெல்லி-நிஜாமுதின் மேற்கு:- தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது, நிஜாமுதின் மேற்கு பகுதி. அது, குறுகிய தெருக்களுக்கும், பெரிய குடியிருப்புகளுக்கும் இடைப்பட்ட காலனி ஆகும். அங்கு கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நடந்த ஒரு மத நிகழ்ச்சியில், வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் அதிக அளவில் நோய் பரவ அந்நிகழ்ச்சி வழிவகுத்து விட்டது.
  2. வடகிழக்கு டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டன், தலைப்புச் செய்தியில் இடம் பிடித்த பகுதி ஆகும். சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பிய அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தாக்கியது. பிறகு அவருடைய மகளுக்கும், 2 உறவினர்களுக்கும் பரவியது.
  3. உ.பி., நொய்டா: டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மாவட்டத்தின் கவுதம புத்த நகரில் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  4. உ.பி., மீரட்: மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் 19 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இவர்களில் 4 பேர், மராட்டிய மாநிலத்துக்கு சென்று வந்த ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
  5. மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மும்பை ஒர்லியின் கோலிவாடா பகுதியையும், கோரிகான் புறநகர் பகுதியையும் கொரோனா மையப்புள்ளிகளாக மாநில அரசு அறிவித்துள்ளது.
  6. மராட்டியம்-புனே: மராட்டிய மாநிலத்தில் முதலில் புனே நகரில்தான் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது, 46 நோயாளிகள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கண்காணிப்பில் உள்ளனர்.
  7. கேரளா-காசர்கோடு: நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காசர்கோடும் ஒன்று. 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும், அவர்களுடன் பழகியவர்களுமே இதற்கு காரணம்.
  8. பத்தனம்திட்டாவில் 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டபோதிலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.
  9. குஜராத்-ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆமதாபாத் நகரம், மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  10. ராஜஸ்தான்-பில்வாரா: ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா என்ற ஜவுளி நகரில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here