Thursday, May 2, 2024

கொரோனாவால் தமிழகத்தில் 43 டாக்டர்கள் மரணம்?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

Must Read

கொரோனாவால் தமிழகத்தில் பல மருத்துவர்கள் இறந்து உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் இறப்பு:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இப்படியாக இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமாக மருத்துவார்கள் இறந்துள்ளனர் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. ஆனால், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார், அமைச்சர் விஜயபாஸ்கர்.

செய்தியாளர்களிடம் பேட்டி:

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜாயபாஸ்கர் கூறியதாவது ” மருத்துவர்கள் பலர் இறந்துள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பரவி வந்த செய்தி பொய்யானது. இதனை இந்திய மருத்துவர் சங்கம் மறுத்துள்ளது. அப்படி இருக்க எப்படி இதனை சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர்.

ஐபிஎல் 2020 போட்டிகள் – வீரர்களுக்கு 5 நாளுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை!!

அப்படி தவறான தகவல்களை பரப்பினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும். இப்படியான செய்திகள் மருத்துவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது. அதனால், இது போன்ற த்தகவல்க்ளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -