லெபனான் வெடி விபத்தில் 73 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!!

0
PM Modi
PM Modi

லெபானான் நாட்டின் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்..!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் தற்போதுவரை 73 பேர்உயிரிழந்ததாகவும், 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா கடும் கண்டனம்!!

இந்நிலையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பெய்ரூட்டில் வெடிவிபத்தினால் ஏராளமான உயிரிசேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here