பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா கடும் கண்டனம்!!

0

ஜம்மு-காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம்..!

பாகிஸ்தான் பிரதமரும், மாஜி கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மற்றும் குஜராத்தின் ஜூனாகத் ஆகிய பகுதியை இணைத்து புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய வரைபடத்தை அறிமுகம் செய்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது, இந்நாள் நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள், காஷ்மீரை இரண்டாக பிரித்து ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நம் நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான் மக்களின் ஆதரவுடன் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை..!

லெபனானில் வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்- 73 பேர் பலி!!

இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு -காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில எல்லைப் பகுதிகளை இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் ஏற்கத்தக்கதல்ல. பாகிஸ்தானின் அபத்தமான இந்த நடவடிக்கை சட்டபடி செல்லாது, பாக்.கின் புதிய வரைபடம் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதையே உலகிற்கு உணர்த்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here