தமிழகத்தில் மின்தடை கிடையாது.. காரணம் இதுதான்.. டென்ஷன் இல்லாம வேலைய பாருங்க மக்களே!!

0
தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நுகர்வோர்களுக்கு தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் மின் கம்பிகள் உள்ளிட்டவைகள் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மாதத்திற்கு ஒரு முறை மின் ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை (மே.26) வாராந்திர விடுமுறையை முன்னிட்டு மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோகமானது தடை செய்யப்படமாட்டாது. அதனால் மின் பயனர்கள் கவலையின்றி உங்களது வேலைகளை வழக்கம் போல மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here