வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் படையெடுப்பு!!

0

இன்று வைகுண்ட ஏகாதேசி திருநாள் என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

வைகுண்ட ஏகாதேசி:

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு காரணமாக கோவில்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா வீரியம் குறைந்து வருவதால் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதேசி. வெங்கடாசலபதிக்கு உகந்த நாள். இதனால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளன. பெருமாளை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் இந்த கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பின் போது பகதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின் பெருமாளை பக்தர்கள் தரிசிக்க காலை 8.00 மணிக்குமேல் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை!!

மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருப்பதி பெருமாள் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 3ம் தேதி வரை இலவச தரிசனம் திருப்பதியில் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here