ஜன.1 முதல் வாகனங்கள் அனைத்திற்கும் பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டேக் முறை:

பாஸ்டேக் என்பது சுங்கச்சாவடிகளில் விரைவாக டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை ஆகும். இந்த முறை கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள 4 வங்கிகள் சுமார் 1 லட்சம் பாஸ்டேக்குகளை விநியோகித்தனர். அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டு 7 லட்சம் பாஸ்ட்டேகுகள் என்று எண்ணிக்கை உயர்ந்தது. பின், 2018 ஆம் ஆண்டு அது 34 லட்சமாக உயர்ந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டயமாக்கப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இன் படி டிசம்பர் முதல் பதிவு செய்யப்பட்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து பேசினார்.

வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் படையெடுப்பு!!

அவர் கூறியதாவது, “பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுவது மூலம் பயணிகள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. வரும் ஜனவரி மாதம் முதல் பாஸ்டேக் முறை கட்டயமாக்கப்பட்டுள்ளது. இந்த முறையால் எரிபொருள் செலவு மற்றும் பயணிப்போரின் நேரம் மிச்சமாக்கப்படுகின்றது” இவ்வாறாக தெரிவித்தார். இத்துடன் FC வாங்கும் போது பாஸ்ட்டேக் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here