இந்தியா & அமெரிக்கா டிஎன்ஏ.,வில் சகிப்புத்தன்மை மாயம் – ராகுல் காந்தி வருத்தம்..!

0
Rahul Gandhi
Rahul Gandhi

இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டினர் டிஎன்ஏ.,வில் இருந்த சகிப்புத்தன்மை மாயமாகி உள்ளதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ராகுல் காந்தி கருத்து:

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்னசுடன் காணொளி வழியாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நட்பு சிறப்பாக உள்ளது. நாம் இருவரும் சகிப்புத்தன்மை மிக்க நாடுகள். நமது டிஎன்ஏ.,வில் அது உள்ளது என கூறினார். மேலும் நாம் திறந்த மனதுடன் புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆனால் தற்போது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சகிப்புத்தன்மை என்கிற டிஎன்ஏ மாயமாகி உள்ளது. இது போன்ற சூழலை தான் பார்த்ததில்லை, இது தமக்கு அதிகம் வருத்தத்தை தருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளிலும் இந்த சூழலை தான் பார்த்ததில்லை என கூறியுள்ளார். இந்தியாவில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் – ஆப்ரிக்கர்கள் என பிரித்து நாட்டை பலவீனப்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.

முதலில் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாருங்கள் – பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி..!

தங்களை தேசியவாதிகள் என அவர்கள் அழைத்துக் கொள்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். ஒரு காலத்தில் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவாக இருந்த இரு நாட்டு உறவு தற்போதைய காலத்தில் பாதுகாப்பு துறையில் மட்டுமே கவனத்தை செலுத்துவதாக தனது உரையாடலின் போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here