முதலில் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாருங்கள் – பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி..!

0
Imran Khan
Imran Khan

இந்தியாவிற்கு பண பரிமாற்றத்தில் உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்க்கு பதிலடி கொடுத்து உள்ளார் நம் நாட்டின் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா.

தீவிரப்படுத்த தயக்கம்:

கொரோன பாதிப்பால் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதில் பாகிஸ்தானும் ஒன்று. அங்கு 1.34 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்க பட்டு உள்ளனர். 2000 க்கும் அதிகமானோர் உயிர் இழந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த நாட்டு அரசு பொது முட்டகத்தை அமல் படுத்த தயக்கம் காட்டி வருகிறது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வலியுறுத்தி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான் அரசு, ஆனால் இதை எதனையும் கருத்தில் கொள்ளாமல் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி இட்டார்.

உதவ தயாராக உள்ளோம்:

அவர் வெளி இட்ட செய்தி என்னவென்றால் ” நங்கள் பண பரிமாற்ற திட்டத்தை வெற்றிகாரமாக செயல் படுத்தி உள்ளோம். சர்வதேச சமூகம் இந்த திட்டத்தின் வெளிப்படை தன்மையை பாராட்டி ள்ளது. பாக்கிஸ்தான் கடந்த 9 வாரத்தில் ஒரு கோடி ஏழை மக்களுக்கு 12 கோடி வரை வெற்றிகரமாக பணப் பரிமாற்றம் செய்து உள்ளது. இதனால் இந்த திட்டத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். ஏனென்றால் இந்தியாவில் 34% பேர் கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் வாழ முடியாது.”

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் காட்டமாக அவரை விமர்சித்து வந்தனர். அதில் “முதலில் உங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்” என்று கூறி வந்தனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.

அனுராக் ஸ்ரீவஸ்தவாவின் பதிவு:

“மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீத அளவுக்கு பாகிஸ்தானுக்கு கடன் சுமை உள்ளது என்பதை அந்நாடு நினைவு கொள்வது நல்லது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்கான இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு பெரியது” என்று அவருக்கு பதில் கொடுத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here