தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

0
rain
rain

தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜிஎஸ்டி வரி கணக்குகள் தாமதமாக சமர்ப்பித்தால் அபாரதமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

ஆந்திர மற்றும் ஒடிசா கடற்கரையில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை 16ம் தேதி வரை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here